இணையத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது


இணையத்தில் உள்ள சிறந்த ஆன்லைன் வேலைவாய்ப்புகளைக் குறித்து இந்த பதிவு உங்களுக்கு வழிகாட்டும். வீட்டிலிருந்தபடியே 0% முதலீடு இல்லாமல் நம்மால் நல்ல கணிசமான வருமானத்தை ஈட்ட முடியும். ‘இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்’ என கூகிள் தேடுபொறி மூலம் தேடி நீங்கள் இங்கு வந்திருந்தால் சரியான தகவல்களைத் தான் பெற்றுள்ளீர்கள். சரி, இப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி – இணையத்தில் தேடுதல் செய்யும் போது ஏதாவது வெப்சைட் ஒரு குறிப்பிட்ட பணத்தை செலுத்திவிட்டு ஆன்லைன் வேலையில் சேரச்சொன்னால் விழிப்புடன் செயல்படுங்கள். நிறைய வெப்சைட்கள் பணத்தை நம்மிடம் இருந்து மோசடி செய்ய இவ்வாறு வலைவிரிக்கின்றன. உங்கள் ஆர்வத்தைக் குலைப்பதாகவோ, அச்சமூட்டுவதாகவோ எண்ண வேண்டாம். தெளிவாக உண்மையை எடுத்துச் சொல்லுவதுதான் நல்லது. நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்பி இங்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு தரவேண்டியது வேலை & ஊதியம். நீங்கள் தரவேண்டியது உழைப்பு – அவ்வளவுதான். இதற்கு நடுவில் வேலையில் சேர ஒரு தொகையை செல்லுத்த சொன்னால் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

தேவைகள்:
இனி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என காணலாம் வாருங்கள். இப்பக்கத்தில் உங்களுக்கு சில அருமையான ஆன்லைன் வேலைகளும் வெப்சைட்களும் அறிமுகம் செய்து வைக்கப்படும். நீங்கள் சரியாக பயன்படுத்தி வந்தால் இத்தளங்கள் உங்களுக்கு தவறாமல் கனிகொடுக்கின்ற மரங்களைப் போலாகும். இப்பொழுது உங்களுக்கு தேவையானவை இரண்டுதான்,
  1. இணையவசதி கொண்ட ஒரு கம்ப்யூட்டர்
  2. ஆன்லைன் வேலை செய்யத்தேவையான ஆர்வம்
இவைகளைத் தவிர கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், வங்கிகணக்கு, முதலீடு, முன்-அனுபவம், படிப்பு, திறன்கள் என எதுவும் தேவையில்லை. இவ்விரண்டும் உள்ளவர்கள் யாரானாலும் கீழே தொடரலாம். வேலைகள் என்ன என தெரிந்து கொண்டு சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.

எல்லாவற்றுக்கும் முதலாக 

பேசா கணக்கை தயார் செய்துகொள்ளுங்கள்

முதலில் உங்களுக்கு ஒரு பேசா அக்கொண்ட் (கணக்கு) வேண்டும். பேசா என்பது ஒரு வெப்சைட். இணையத்தில் இந்த வெப்சைட் ஒரு வங்கி போல செயல்படுகிறது. நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
  1. http://www.payza.comஎன்ற முகவரிக்கு செல்லுங்கள்
  2. வெப்சைட் லோடானதும், ‘Sign Up Now’ என்ற பட்டனை அழுத்துங்கள்
  3. இப்பொழுது ‘Starter’ என்ற தொடுப்பை தேர்வு செய்யவும்
  4. பதிவு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, ‘Next’ என்ற பட்டனை அழுத்துங்கள்
  5. இரண்டாவது படிவத்தையும் சரியாக பூர்த்தி செய்யவும்.
  6. இரண்டாவது படிவத்தில் கவனத்திற்குரியவை: ‘Transaction pin’ என்பது இன்னொரு பாஸ்வேர்டு போன்றது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள கூடிய எண்களை இக்கட்டத்தில் பூர்த்தி செய்யுங்கள். ‘Third Party Information’ என்ற விண்ணப்பத்தில் ‘No’ என்று தேர்வு செய்யவும். எல்லாம் முடிந்தபிறகு, ‘Final Step’ என்ற பட்டனை அழுத்துங்கள்.
  7. இப்பொழுது, கணக்குப்பதிவு படிவத்தில் நீங்கள் கொடுத்த உங்கள் ஈமெயில் முகவரிக்கு பேசா ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அந்த மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள தொடுப்பை சொடுக்குங்கள், உங்கள் பேசா கணக்கு உடனடியாக ஆக்டிவேட் ஆகிவிடும்.
இப்பொழுது இந்த ஈமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் கொண்டு உங்களது பேசா கணக்கை லாகின் செய்யலாம். இந்த பேசா அக்கௌண்ட் ஒரு பேங்க் அக்கௌண்ட் போன்றது. இணையத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்த பேசா கணக்கில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஆன்லைன் வேலை வழங்குகின்ற ஒரு வெப்சைட்டில் நீங்கள் இரண்டு டாலர் (2$) சம்பாதித்து இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு அப்பணம் தேவைப்படும் போது, ‘Withdraw’, ‘Cashout’, ‘Payment’, ‘Payout’ என்று எதாவது தொடுப்பு அந்த வெப்சைட்டில் இருக்கிறதா என பாருங்கள். கண்டிப்பாக இருக்கும், அதனை சொடுக்குங்கள். உடனே ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் Payment Mode/Payment Option என்ற கட்டத்தில் ‘PAYZA’ என தேர்வு செய்து உங்களது பேசா அக்கௌண்டை லாகின் செய்ய நீங்கள் பயன்படுத்தும் ஈமெயில் முகவரியை சமர்ப்பியுங்கள். நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் பேசா அக்கௌண்டிற்கு வந்துவிடும். இப்படியே நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் பேசா கணக்கில் சேர்த்து வைத்து கொண்டே வாருங்கள். பேசா கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள பேசாவில் லாகின் செய்து ‘Withdraw Funds’ என்ற தொடுப்பை அழுத்துங்கள். அதில் பணத்தை எவ்வாறு பெறலாம் என வழிகள் பட்டியல் இடப்பட்டிருக்கும் (உதாரணத்திற்கு பேங்க், செக், மணி ஆர்டர் – உங்களது நாட்டை பொருத்து மாறும்). அதில் உங்களுக்கு தேவையான வழியைத் தேர்வுசெய்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் உங்கள் நாட்டுப் பணமாகவே வந்துவிடும். அல்லது நீங்கள், உங்களது பேசா அக்கௌண்டிலேயே பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே இருக்கலாம். அதில் உள்ள பணத்தை கொண்டு வெப்சைட், சாப்ட்வேர், சி.டி, புத்தகம், பொருள் வாங்குவது… என இணையத்தில் ஷாப்பிங்க் கூட செய்யலாம். நீங்கள் விரும்பினால் உங்களது பேசா அக்கௌண்டில் சேர்ந்த பணத்தை இணையத்திலேயே முதலீடு செய்து இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம் (இது குறித்து கீழே செய்திகள் உள்ளன). பேசா அக்கௌண்டில் எவ்வளவு பணத்தை சேமிக்கிறோமோ அவ்வளவும் லாபம் தான். இணையத்தில் சம்பாதிக்க கண்டிப்பாக இதெல்லாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் ஆன்லைன் வேலைகளுக்கு புதியவர் என்றால் இதெல்லாம் பார்க்க பெரிய வேலைகள் போல தெரியலாம், எனினும் நீங்களாகவே செய்துபார்க்கும் போது நன்றாக புரிந்துகொள்வீர்கள். இப்பொழுது பேசா என்றால் என்ன என்று ஒரு மேலோட்டமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். அதனை புரிய வைக்கத்தான் இத்தனை விளக்கங்களும் :-)

ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை


முதல் வேலை டேட்டா என்ட்ரி. இந்த வேலையில் நீங்கள் தட்டச்சு பணி செய்ய வேண்டும். இன்று நிறைய மக்கள் ஆன்லைனில் விரும்பி செய்வது டேட்டா என்ட்ரி வேலைகளைத் தான். இதற்கு எந்த அனுபவமும் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே உங்கள் ஓய்வு நேரங்களில் இந்த டேட்டா என்ட்ரி வேலையை செய்து நன்கு சம்பாதிக்கலாம். கீழே உள்ள படத்தை நிச்சயம் ஜிமெயில், யாஹூ, பேஸ்புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்கும் போது பார்த்திருப்பீர்கள். இதனைத் தான் கேட்ப்சா என்பார்கள். கேட்ப்சா போலி கணக்குகள் உருவாவதை தவிர்க்கும். கிட்டத்தட்ட அனைத்து தளங்களும் இன்று கேப்ட்சா பரீட்சை வைத்துதான் உறுப்பினர்களை சேர்த்து கொள்கின்றன. எனவே கேப்ட்சா இல்லாமல் இன்று இணையம் கிடையாது என்றே சொல்லலாம். இவைகளின் பயன்பாடு அந்தளவு இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
Picture
கேப்ட்சா
கேப்ட்சாவின் முக்கியத்துவத்தை இப்பொழுது அறிந்திருப்பீர்கள். தினமும் இணையத்தில் கோடிக் கணக்கான கேப்ட்சாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே கேப்ட்சாக்களை சில கம்பனிகள் தயாரித்து இணையதளத்தில் விற்று வருகின்றன. இந்த கேப்ட்சா தயாரிக்கும் பணியில் தான் நீங்கள் உதவி செய்ய வேண்டும். அதற்கான தொகை சம்பளமாக வழங்கப்படும். உங்களுக்கு கேப்ட்சா படங்களை தந்து விடுவார்கள். அந்த படங்களில் எழுதப்பட்டுள்ள சொற்களை நீங்கள் டைப் செய்து கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். எவ்வளவு படங்களை பதிவு செய்து கொடுக்கிறீர்களோ அவ்வளவு தொகை ஊதியமாக வழங்கப்படும். கீழே உள்ள படத்தை பாருங்கள்…
Picture
கேப்ட்சா படத்திற்கு கீழே உள்ள கட்டத்தில் அதற்குரிய சொற்களை டைப் செய்து ‘Submit Answer’ என்ற தொடுப்பை சொடுக்க வேண்டும். ஒரு கேப்ட்சாவை பதிவு செய்தவுடன் அடுத்த படம் உடனே தோன்றும். பின்பு அதனை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு படங்களை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் பல படங்களை பதிவு செய்து இருப்பீர்கள். இது ஒரு எளிமையான டேட்டா என்ட்ரி வேலை. குறைந்தது 3$ (மூன்று டாலர்) சம்பாதித்தால் கூட உங்கள் பேசா அக்கௌண்டிற்கு எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் உங்களது பேசா கணக்கிற்கு டேட்டா என்ட்ரி வெப்சைட்டில் இருந்து சம்பளம் அனுப்பப்படும். இந்த டேட்டா என்ட்ரி வேலையில் இணைந்து பணிபுரிய எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒரு பேசா அக்கௌண்ட், இணைய வசதி கொண்ட ஒரு கணினி இருந்தாலே போதுமானது. கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்து இந்த வேலையில் 

 Link


இந்த தொடுப்பை கிளிக் செய்துவுடன் தோன்றிய பக்கத்தில் உள்ள ‘Free Signup’ என்ற பட்டனை அழுத்துங்கள். அதில் உள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும். ‘Payment type’ என்ற தலைப்பின் கீழ் ‘Payza’ என்பதை தேர்வு செய்து, ‘Payza Email’ என்ற கட்டத்தில் உங்களது பேசா ஈமெயில் முகவரியை டைப் செய்யவும். இந்த தகவல் மிகவும் முக்கியமானது. ஒருமுறை உங்கள் பேசா ஈமெயில் முகவரியை இந்த வெப்சைட்டில் பதிவு செய்துவிட்டால் பின்பு திருத்தவே முடியாது. எனவே முதல் முறையிலேயே கவனமாக டைப் செய்யுங்கள். எல்லாம் முடிந்த பிறகு படிவத்தை சமர்ப்பியுங்கள். உங்களது டேட்டா என்ட்ரி அக்கௌண்ட் தயார். இனி லாகின் செய்து ‘Solve  Images’ என்ற தொடுப்பை சொடுக்கி சம்பாதிக்கலாம்.
குறிப்புகள்
  1. ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே இருக்க வேண்டும். ஒரு கணினியை பயன்படுத்தி பல அக்கௌண்ட்களை தொடங்காதீர்கள். பல அக்கௌண்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் டேட்டா என்ட்ரி வெப்சைட் நம்மை வேலை செய்ய அனுமதிக்காது.
  2. படத்தில் உள்ள சொற்களை கண்டிபிடிக்க தெரியவில்லை என்றால் ‘Don’t Know’ என்ற பட்டனை அழுத்துங்கள். எனினும் அடிக்கடி இந்த பட்டனை பயன்படுத்த வேண்டாம்.
  3. படங்களை டைப் செய்யும் போது, ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்பினால் ‘Submit and Pause’ என்ற பட்டனை அழுத்துங்கள்.
இது ஒரு அழகான வேலை. நமது ஓய்வு நேரங்களை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த டேட்டா என்ட்ரி வெப்சைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Similar Videos

0 comments:

Featured Movies